நடுச்சாமம் 12 மணிக்கும் பெண்கள் தனியாக வீதியில் சென்று வந்த மண்ணில் இன்று பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனரா? அல்லது தாமே பிரச்சினைக்கு ஆளாகின்றனரா? என்ற கேள்விக்கு பதில் இல்லை.
வடக்கில் அரச நிர்வாகத்தில் மேலதிகாரியாக ஆண்களைவிட பெண்கள் அதிகமாக பதவிகளில் இருக்கின்ற போதும் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துச் செல்லுகின்றன.
பெண்கள் மீதான பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அரச துறையினர் அக்கறை எடுத்து செயற்படுவார்களாயின் ஓரளவுக் கேனும் கட்டுப்படுத்த முடியும்.
பெரிசுகளால் புனிதம் காக்கப்பட்ட தாய் மண் இன்று புனிதம் கெடுகின்ற அளவுக்கு மாற்றி விட்டிருக்கிறார்களா? அல்லது அவர்களே மாறுகின்றனரா? என்ற கேள்விக்கான பதிலை கூற முடியவில்லை என்றால் சம்பந்தப்பட்ட துறையினர் இருந்தும் பயனில்லை என்பது தெரிகிறது.
வடக்கே போதைப் பொருள்கள் வந்து குவிகின்றன.
போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு, பாலியல் பிரச்சினைகள், விபச்சாரம், கொலை, களவு, தற்கொலை, அரச நிர்வாக ஊழல் என நாளாந்தம் தீய சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
தந்தை மகள் வித்தியாசமில்லாத அளவுக்கு பாலியல் தொந்தரவு அதிகரிக்கின்றன.
தாய் மகளை படம் பிடித்து தவறான செயற்பாட்டிற்கு முற்படுத்த முற்பட்டார் போன்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
2009 இற்கு முன்னர் எப்படி இருந்த வடமாகாணம் சீர்குழைந்து நிற்கின்றது.
சமுதாயத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் கல்வித் துறையில் இருந்து பல துறைகள் சமூக அக்கறை இன்றி செயற்படுகிறது.
திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாதவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் பெண்கள் ஆண்களின் வாழ்வு செல்கிறது.
அற்ப சொற்ப ஆசைகளுக்காக தமது பண்பாட்டை இழந்து நிற்பதோடு பதவிக்கு வரவேண்டும் என்றால் இதுகளை பெரிதுபடுத்தக் கூடாது என்று அதிகாரிகள் சொல்லுகினமாம்.
படித்த காலத்தில் மண் பற்று, சமூக அக்கறை தொடர்பில் எதுவும் கற்கவில்லையா? கற்பிக்கவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.
கற்பது என்பது கல்வியை மட்டுமல்ல தாம் எப்படி பண்பாட்டோடு வாழ்வது பற்றியும் கற்க வேண்டும்.
அதிகார தரப்பினர் தொடக்கம் எல்லோருக்கும் கற்பிக்க வேண்டும்.
பொறுப்பானவர்கள் பொறுப்புள்ளவர்களாக எப்படி வாழ்வது என்ற செயலமர்வை நடத்த வேண்டும்.
குற்றம் செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற பயம் இருக்க வேண்டும். அது பெரிசுகள் காலத்தில் இருந்தது.
பயம் இருந்ததால் தான் அன்று பண்பாட்டுடன் மண் பேசப்பட்டது. அந்தப் பயத்தை கொண்டு வரவேண்டும். அதற்கான துறையில் இருப்பவர்கள் செய்ய வேண்டும்.
பெண்கள் அமைப்புகள் பேருக்கு இருக்கின்றன. பெண்கள் மீதான வன்முறைக்கு குரல் கொடுக்க தயங்குகின்றனர்.
வீரவரலாறு படைத்த பெண்கள் பிறந்த மண்ணில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறுவது கவலை தரும் விடயமாகும்.
யாழில் பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுடன் கைது என்ற செய்தி இந்த நாட்டை பின்நோக்கி செல்லும் செய்தியாக காணப்படுகிறது.
இப்படி இருந்தும் போதைப் பொருளை நாட்டுக்குள் கொண்டுவரும் முதலைகளை கைது செய்ய முடியாமல் இருக்கின்றனர்.
இந்த சம்பவங்களை இல்லாமல் செய்வதென்றால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் பிழை செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கும் தரப்பினர், மேல் மட்ட அரச, தனியார் நிர்வாகத்தில் பிழை நடந்தால் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்பொழுது தான் தவறுகளை இல்லாமல் செய்ய முடியும்.
நடவடிக்கை எடுக்க தயங்குவார்கள் ஆனால் பிரச்சினைகள் அதிகரிப்பதை தவிர குறைய வாய்ப்பில்லை என்பது உண்மை.