மூன்றாம் காலாண்டிற்கான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது
2 months ago
மூன்றாம் காலாண்டிற்கான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று முன்தினம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த பதில் அரசாங்க அதிபர்,
இக் கூட்டத்தின் நோக்கமானது நிதி முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடுகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றதா என்பதனை ஆராய்வதும், நிதி முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதாகவும் தெரிவித்ததுடன், இவ் மீளாய்வுக் கூட்டத்தில் நிதி முன்னேற்றங்களை ஆராய்ந்த வகையில் திருப்திகரமாக விருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், கணக்காளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.