டக்ளஸ் தேவானந்தாவால் தான் எங்களின் கடல் வளம் நாசமாகிப் போனது.-- நா. வர்ணகுலசிங்கம் தெரிவிப்பு
டக்ளஸ் தேவானந்தாவால்தான் எங்களின் கடல் வளம் நாசமாகிப் போயுள்ளது என்று வடமராட்சி வடக்கு சமாசத்தின் உபதலைவர் நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை கடற்பரப்பை சூழவும் சீனாவின் ஆதிக்கமும் வடக்கு கடற்பரப்பில் இந்தியாவின் ஆதிக்கமும் உள்ளன.
சர்வதேசத்தின் பிடிக்குள் இலங்கை மாட்டிக் கொண்டுள்ளது. இந்திய மீனவர்களால் வடக்கு கடல் சீரழிந்து போகிறது என்று கூறினார்.
இதன்போது செய்தியாளர் ஒருவர் “கடந்த அரசின் அமைச்சர் டக்ளஸ் கடற்றொழிலாளரின் பிரச்னை பற்றி தற்போதைய ஜனாதிபதியோடு பேச வுள்ளார் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்...?”, என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த வர்ணகுலசிங்கம், “அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் தான் எங்களின் கடல் வளம் நாசமாகிப் போயுள்ளது.
தடை செய்யப்பட்டிருந்த தொழில்களை ஆதரித்து இயங்கவிட்டவரும் டக்ளஸ்தான்.
எல்லாவற்றையும் அழித்து மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியவரும் அவரே.
ஜனாதிபதியுடன் அவர் என்ன பேசப் போகிறார்.” - என்றார்.