சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்த வேண்டும்! - மன்னிப்புச் சபையின் செயலாளர் அக்னஸ் வலியுறுத்தல்

இலங்கை தொடர்பான விவகாரங்களை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கும், சர்வதேச நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்லவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்ட பின்னர் 'தமிழ் கார்டியன்' ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

சர்வதேச சமூகம் இலங்கை விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச்சபைக்கும். சர்வதேச நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்லவேண்டும்.

முதலில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை விவகாரத்தை எடுத்துச் செல்லவேண்டும். அடுத்து நாடுகளும், அரசாங்கங்களும் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச்செல்லவேண்டும்.

ஐ.நா.பாதுகாப்புச்சபை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை கோரவேண்டும்.

இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் வெளிநாடு செல்லும் போது அவர்களுக்கு எதிராக சர்வதேச ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உலகளாவிய நியாயாதிக்கத்தைப் பிரயோகிக்க வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் தமது அனுபவங்களையும், அவர்களின் வேதனைகள், அவர்களின் அச்சங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள் குறித்தும் பேசினார்கள்.

தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அவர்கள் ஏங்குகின்றனர். அவர்களின் முகத்தில் கோபமும். ஆத்திரமும் வெளிப்பட்டது - என்றார்

அண்மைய பதிவுகள்