இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த நான்கு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
3 months ago

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சூழவுள்ள பகுதியில் இன்று காலை நிலவிய பனிமூட்டமான வானிலை காரணமாக நான்கு விமானங்கள் தரையிறங்குவதற்காக வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.
பனியுடனான வானிலை காரணமாக விமானிகளால் ஓடுபாதையைச் சரியாக அவதானிக்க முடியாமையினால் குறித்த விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.
டுபாய், சீனா, இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்குப் பயணித்த விமானங்களே இவ்வாறு வழி மாற்றப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் பனியுடனான வானிலை சீரடைந்ததன் பின்னர் குறித்த விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
