இலங்கை ஹிக்கடுவை கடற்கரையில் நீராடச் சென்ற கனடாவைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவிப்பு
7 hours ago
இலங்கை ஹிக்கடுவை கடற்கரையில் நீராடச் சென்ற கனடாவைச் சேர்ந்த பிரஜை ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.
19 வயதான கனேடியர் ஒருவரே காணாமல் போனவர் ஆவார்.
இவர் குளிக்கச் சென்ற இடத்தில் அபாய பதாகை வைக்கப்பட்டு இருந்த நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் கடலில் குளிக்கச் சென்றமை ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தது.
காணாமற்போன நபரை தேடும் பணியில் பொலிஸாரின் உயிர்காக்கும் படையினரும் கடற்படையின் உயிர்காக்கும் படையினரும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.