கனடாவின் டொரண்டோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 14 வயதுச் சிறுவன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
டொரண்டோவில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயதான அஜய் சிம்ப்சன் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
ஜூன் 24 ஆம் திகதி ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஃபால்ஸ்டஃப் அவென்யூ பகுதியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டு பொலிஸ் விரைந்தது.
நான்கு நபர்கள் துப்பாக்கிகளுடன் லைட் நிற suv காரிலிருந்து இறங்கித் துப்பாக்கி சூடு நடத்தினர் என பொலிஸ் துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கி சூடு நடத்திய பின்னர், சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் எனவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டறியப்பட்ட சிம்ப்சன் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இந்த வழக்கில், கடந்த வியாழக்கிழமையன்று பொலிஸ் அதிகாரிகள் 14 வயதான ஒரு சிறுவனைக்
கைது செய்து, முதல் தரக் கொலைக் குற்றச்சாட்டைச் சுமத்தினர்.
குற்றவியல் நீதிச் சட்டத்தின் காரணமாக, அவரது அடையாளத்தை வெளிப்படுத்த முடியாது. மீதமுள்ள மூன்று சந்தேக நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறப்பட்டது.