துப்பரவுத் தொழிலாளர்களை கேவலப்படுத்தும் விதத்தில் வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம் அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பரவுத் தொழிலாளர்களை கேவலப்படுத்தும் விதத்தில் வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம் அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் படித்து பட்டம் எடுத்தவர்கள் வேலைத் திறமை இருந்தால் வேலை நிறைந்த தனியார் கம்பனிகளில் இணைந்து உங்கள் திறமையைக் காட்டி நாட்டை முன்னேற்ற முடியுமா? அரச வேலை எடுத்து சும்மா இருக்கலாம் என்ற பிளான் தான் என்று ஆதங்கம் தெரிவிக்கப்படுகிறது.
வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் மக்கள் மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் ஒன்று நேற்றுக் காலை 09.30 மணியளவில் யாழ். நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த விழிப்புணர்வு செயல் திட்டத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கல், மக்களின் கருத்துக்களை உள்வாங்கல் போன்ற நிகழ்வுகள், பட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் ஆரம்ப நிகழ்வு உலகத் தமிழாராட்சி மாநாட்டு படுகொலை நினைவுத் தூபி முன்றலில் காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகியது.
அதனைத் தொடர்ந்து யாழ். நகர்ப் பகுதிக்குள் பேரணி இடம்பெற்றதுடன், பட்டம் பெற்றுவிட்டு தாங்களும் சாதாரண வேலைகளைத்தான் செய்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டும் முகமாக வீதியைக் கூட்டுதல், குப்பை வண்டியை தள்ளுதல் போன்ற செயல்பாடுகளை முன்னெடுத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்த செயற்பாட்டை மேற்கொண்டதனால் தான் பார்வையாளரின் விமர்சனத்துக்கு உள்ளாகினர்.