லெபனான் மிகவும் மோசமான காலகட்டத்தை எதிர்கொள்கிறது" என்று ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.
லெபனான் மிகவும் மோசமான காலகட்டத்தை எதிர்கொள்கிறது" என்று ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஹிஸ்புல்லாவுடனான போர் நிறுத்தத்துக்கான உலகளாவிய அழைப்புகளை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.
இந்த நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், தரைவழித் தாக்குதலுக்கும் தயாராகி வருகிறது.
லெபனானில் உள்ள ஐ. நா. மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் இம்னான் தற்போது பல தசாப்தங்களில் இல்லாத கொடூரமான போரை எதிர்கொள்கிறது.
ஒரு தலைமுறையில் லெபனானில் மிகவும் மோசமான காலகட்டத்தை நாங்கள் காண்கிறோம்.நெருக்கடி இன்னும் மோசமடையக் கூடும்.
இது ஆரம்பம் என்று பலர் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள்" எனக் கூறினார்.
இதேவேளை, லெபனானில் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் நேற்றுக் காலை 25 பேர் உயிரிழந்தனர்.
இதனால் ஒரு வாரத்தில் மட்டும் 800 பேர் வரை உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.