இலங்கையில் நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசு அறிவிக்காமையால் விவசாயிகள் அளெசகரியம்

2 months ago



பெரும்போகத்திற்கான நெல் அறுவடை பல மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவிக்காமையினால், தாங்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், அரசாங்கத்தின் நெல்லை கொள்வனவு செய்யும் வேலைத் திட்டமும் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமத்தினால் தங்களது அறுவடைகளை குறைந்த விலையில் தனியார் துறையினருக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக விவசாயிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக விவசாய சங்கங்கள் குறிப்பிடுகின்றன.

அண்மைய பதிவுகள்