பிள்ளையான் கட்சியின் ஆதரவாளர்களின் தாக்குதலில் கருணா அம்மானின் கட்சி வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் படுகாயம்.

2 months ago



மட்டக்களப்பில் கருணா அம்மானின் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் கட்சியின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகின்றவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கருணா அம்மானின் கட்சி வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் மட்டு. ஜெயந்திபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று மட்டு. தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கருணா அம்மானின் கட்சி வேட்பாளர் முனிசாமி நாகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர் இருவர் உட்பட 3 பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜெயந்திபுரம் பகுதியில் இந்தத் தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.