தற்போதைய கொள்கைகளை கைவிட்டால் நாடு கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தற்போதைய கொள்கைகளை கைவிட்டால் நாடு கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் மாற்றங்களை செய்வோம் என ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முக்கிய அரசியல் வாதிகள் கூறிவரும் நிலையிலேயே மத்திய வங்கியின் உதவி ஆளுநர் சனட்ரனாத் அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ள பொருளாதார கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவுக்கு உறுதிப்படுத்தியுள்ளன. எனினும், ஜனாதிபதி வேட்பா ளர்களான சஜித் பிரேமதாஸ, அநுர குமார திஸநாயக்கா ஆகியோர் அவரின் கொள்கையை விமர்சித்து வருகின்றனர்.
இருவரும் ஐ.எம்.எவ்வின் ஒப்பந்தத்தை மாற்றவுள்ளதாகக் கூறிவருகின்றனர். தற்போதைய கொள்கைகளை மாற்றியமைக்க நினைத்தால் - அது முடியாத விடயம். அது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திலிருந்து விலகுவதற்கு வழிவகுக்கும்.
தற்போதிருக்கும் கொள்கை திட்டத்தில் சிறிய மாற்றங்களை செய்யலாம். ஆளால், நிதிக்கொள்கைகள் தொடர்பான நிலைப்பாட்டில், மாற்றங்களை ஏற்படுத்தினால் அது நாட்டை கடுமையாக பாதிக்கும். தேர்தலுக்கு பின்னர் கொள்கை மாற்றங்களை செய்வது குறித்து மத்திய வங்கி சிந்திக்கவில்லை - என்றும் அவர் கூறினார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
