கனடாவில் வாழும் 100 புலம்பெயரிகள் இலங்கையில் முதலிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன அமைச்சர் இ.சந்திரசேகரன் தெரிவிப்பு
3 months ago

கனடாவில் வாழும் 100 புலம்பெயரிகள் இலங்கையில் முதலிடுவதற்கும், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
வடமாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்குப் பலர் முன்வந்துள்ளனர்.
நாம் ஆட்சிக்கு வாமுன்னர் எம்மால் நாடு திவாலடையும்' என்று பலரும் கூறிவந்தனர்.
ஆனால். இன்று நாடு நல்ல நிலையை நோக்கிச் சென்று கொண்டிருகின்றது.
உலக நாடுகள் பலவும் எம்முடன் உரையாடுகின்றன.
சர்வதேச வர்த்தகம் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே கனேடியர்கள் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
