கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமைகளை பாதுகாப்பதற்கான மாற்றங்களை இலங்கை மேற்கொள்ள வேண்டும். ஆஸி வலியுறுத்து.
கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமைகளை தீவிரமாகப் பாதுகாப்பதற்குத் தேவையான மாற்றங்களை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜெனீவாவில் உள்ள அவுஸ்திரேலியத் தூதுக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையில், பொருளாதார நெருக்கடியின் மனித உரிமைகள் தாக்கங்கள் மற்றும் ஸ்திரத் தன்மையை மீட்டெடுப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எனினும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் உட்பட அனைத்துப் புதிய சட்டங்களும் இலங்கையின் மனித உரிமைக் கடமைகளை நிறைவேற்றும் வகையில் அமைய வேண்டும்.
உண்மை. ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையத்துக்கான யோசனை தொடர்பில் பொருத்தமான ஆதாரங் கள் மற்றும் செயற்படுத்தல் ஆகி யவற்றின் முக்கியத்துவத்தை பேண வேண்டும். மேலும் நம்பிக்கையைப் பெறுதல் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தல் அவசியம் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளது.