சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்கு ஒரு மாதத்தில் நான்கு மருத்துவ அத்தியட்சகர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதனால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
கச்சேரி மருத்துவமனை பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய மருத்துவ அத்தியட்சகர் ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனைக்கு இடமாற்றல் செய்யப்பட்டார். அவரின் இடத்துக்கு புதிய மருத்துவ அத்தியட்சகர் நியமிக்கப்பட்டார்.
அவர் கட மையைப் பொறுப்பேற்ற மறுநாள் ஒரு வருட உயர் கல்விக்காக சென்றதையடுத்து ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் கடமையாற் றிய பெண் மருத்துவர் சாவகச்சேரி மருத்துவமனைக்கு பதில் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்
அதேவேளை மற்றொரு மருத்துவர் கொழும்பு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டு பத்து தினங்களுக்கு முன்னர் பதில் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றுள்ள நிலையில் கடந்த புதன்கிழமை மாகாண சுகாதார அமைச்சின் பணிப்பாளரால் பிறிதொரு மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சாவகச்சேரி மருத்துவ நிர்வாகத்தினரிடம் விசாரித்தபோது உயர்கல்விக்குச் சென்ற மருத்துவர் கடமையைப் பொறுப்பேற்கும் வரை புதிய மருத்துவப் பொறுப்பதிகாரி பதில் கடமையாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.