அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் (13) அனுஸ்டிக்கப்பட்டுள்ளது







முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் (Appapillai Amirthalingam) 35ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் (13) அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வினை, பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் அண்ணா கலைமன்றம் ஆகியன இணைந்து வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின் திருவுருவ சிலையின் முன்றலில் நடத்தியுள்ளன.
இந்நிகழ்வின் போது, ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் திருவுருவசிலைக்கு மலர்மாலையும் அணிவிக்கப்பட்டது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவன், யசோதா சரவணபவன், வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நாகரஞ்சினி ஐங்கரன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான ஜெயந்தன் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
