முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் மாட்டு காவலுக்காக அமைக்கப்பட்ட கொட்டிலில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று(18.08.2024) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, உயிரிழந்த நபர் மாட்டு காவலுக்காக சென்றவர் எனவும் அந்த காவல் கொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த வேளை அவர் உயிரிழந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.