யாழ்ப்பாணத்தில் வேலைக்குச் சென்ற இளைஞன் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

4 months ago


யாழ்ப்பாணத்தில் வேலைக்குச் சென்ற இளைஞன் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியை சேர்ந்த தவராசா ரகுமாதவா (வயது 32) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

வீட்டிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை வேலைக்கு சென்ற நிலையில், வேலைத்தளத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து, சக தொழிலாளர்கள் அவரை கோப்பாய் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.