மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்ஸூ விரைவில் இலங்கை வரவுள்ளார்.-- இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் தெரிவிப்பு
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்ஸூ விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் மசூத் இமாட் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமா நாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலின்போது, மாலைதீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என தூதுவர் தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளையும் ஆராய்ந்தார்.
மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் இந்த உரையாடல் நடைபெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான மாலைதீவு பிரதி தூதுவர் பாத்திமத் கினாவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.