காசாவில் சிறுவனை சித்தரிக்கும் விவரணச் சித்திரத்தை பி.பி.சி அகற்றியமை, இஸ்ரேலின் அழுத்தம் காரணமாகவே பி.பி.சி அதனை அகற்றியதாக குற்றச்சாட்டு


காசாவில் யுத்தத்தில் சிக்கிய ஒரு சிறுவனின் வாழ்க்கையை சித்தரிக்கும் விவரணச் சித்திரத்தை பி.பி.சி அகற்றியுள்ளதை தொடர்ந்து இஸ்ரேலின் அழுத்தங்கள் காரணமாகவே பி.பி.சி அதனை அகற்றியதுஎன குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
காசா - போர்க்களத்தில் எப்படி உயிர்தப்புவது என்ற வீடியோவை சில நாட்களிற்கு முன்னர் பி.பி.சி வெளியிட்டிருந்தது.
காசாவின் மீதான இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குதலின் மத்தியில் தப்பிப் பிழைத்து வாழும் 13 வயது சிறுவனின் வாழ்க்கை பற்றியது இந்த விவரணச் சித்திரம்.
காசாவில் இடம்பெற்ற பேரழிவு பற்றிய குழந்தைகளின் பார்வை குறித்த கருத்தே இந்த விவரணச் சித்திரம் என தெரிவித்திருந்த பி.பி.சி இது அவர்களின் அனுபவங்களிற்கான விலைமதிப்பற்ற சான்று என நாங்கள் கருதுகின்றோம்,
வெளிப்படைத் தன்மை குறித்த எங்கள் அர்ப்பணிப்பை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
எனினும் அந்த விவரணச் சித்திரத்தில் தோன்றிய சிறுவனின் தந்தை கலாநிதி அல்மான் அல்யாசூரி ஹமாஸ் அரசாங்கத்தில் பிரதிவிவசாய அமைச்சராக பணியாற்றியவர் என தெரிய வந்ததன் பின்னர் பி.பி.சி அந்த விவரணச் சித்திரத்தை நீக்கியுள்ளது.
2007 இல் அவர் பிரதி அமைச்சராக பணிபுரிந்திருந்தார்.
ஹமாஸ் அமைப்பை பிரிட்டன் பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றது.
பி.பி.சி அந்த விவரணச் சித்திரத்தை விலக்கியதை கண்டித்துள்ளவர்கள் குறிப்பிட்ட நபர் தொழில்நுட்ப அதிகாரியாகவே ஹமாசின் அமைச்சரவையில் பணியாற்றினார் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாலஸ்தீன மக்களை மனிதாபிமான முகத்துடன் சித்தரிக்கும் இஸ்ரேலின் தாக்குதலினால் காசா மக்களின் நாளாந்த வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் அந்த வீடியோவை பி.பி.சி அகற்றியமை குறித்து பலர் கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளனர்.
வீடியோவில் தோன்றிய சிறுவனின் தந்தை ஹமாஸ் அமைப்பின் அமைச்சரவையில் பணியாற்றினார் என்பதற்காக அந்த வீடியோவை அகற்ற முடியாது என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை அந்த சிறுவனின் தந்தையின் பின்னணி குறித்து தனக்கு முதலில் தெரிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ள பி.பி.சி இது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
