வீட்டாரை அச்சுறுத்தி 'டிப்பர்' கொள்ளை -மடக்கிப்பிடித்த பொலிஸார்

5 months ago


வீட்டுக்குள் நுழைந்த 15பேர் கொண்ட வன்முறைக் கும்பல் அங்கிருந்தோரை அச்சுறுத்தி கொள்ளையடித்துக் கொண்டு சென்ற டிப்பரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். இருப்பினும் கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூரில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்பத் தலைவர் வெளியில் சென்றிருந்த நிலையில், 15பேர் கொண்ட வன்முறைக் கும்பல் வீட்டுக்குள் புகுந்துள்ளது. வீட்டிலிருந்த பெண்களை மிரட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பரை பலவந்தமாக அங்கிருந்து, வீட்டின் மதிலையும் உடைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

உடனடியாக தருமபுரம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் டிப்பர் பயணிப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைவாக அதனைத் துரத்திச் சென்று பிடித்துள்ளனர். டிப்பரைக் கொள்ளையடித்துச் சென்றவர்கள், டிப்பரையும், 4 மோட்டார் சைக்கிளையும் அங்கேயே போட்டுவிட்டுத் தப்பிச் சென் றுள்ளனர். அவற்றை மீட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


அண்மைய பதிவுகள்