இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம், தெற்கு லெபனான் மக்கள் தங்கள் வீடுகளுக்கு மகிழ்ச்சியுடன் திரும்புகின்றனர்.

1 month ago



இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள போர் நிறுத்தம் காரணமாக தெற்கு லெபனான் மக்கள் தங்கள் வீடுகளுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பி வருகின்றனர்.

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பின்னர் அதிகாலையில் இருந்து மக்கள், தெற்கில் உள்ள தங்கள் கிராமங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

இது தொடர்பான படங்களும்,          வீடியோக்களும் வைரலாகி     வருகின்றன. "நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை எங்களாலே விவரிக்க முடியவில்லை.

மக்கள் வெற்றி பெற்றனர்" என்று பொது மகன் ஒருவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர் நிறுத்தத்தை ஈரான் உட்பட பல்வேறு நாடுகள் வரவேற்றுள்ளன.

இந்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதை வர வேற்கிறோம்.

பதற்றத்தை தணிக்கவும், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளவும் பேச்சுகள் மற்றும் இராஜதந்திர பாதைக்கு திரும்பவும் நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தோம்.

இந்த முன்னேற்றம், இந்தப் பரந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழி வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

காஸாவிலும் விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று பலஸ்தீனர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து சீனா, "பதற்றங்களைத் தணிப்பதற்கும், அமைதியை உறுதிப்படுத்தவும் நாங்கள் ஆதரவளிப்போம்" எனத் தெரி வித்துள்ளது.

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் கூறுகையில், "லெபனானில் ஏற்படுத்தப்பட்டுள்ள போர் நிறுத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

இஸ்ரேல் ஆட்சியின் அடக்குமுறை முடிவடைந்துள்ளது. இனி அங்குள்ள மக்கள் அமைதியை உணர்வார்கள் என்கிறார்

அண்மைய பதிவுகள்