அமெரிக்காவில் நடுவானில் விமானம் குலுங்கியதில் 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
அமெரிக்காவில் நடுவானில் விமானம் குலுங்கியதில் 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. மெக்சிகோவின் கான்கன் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் சிக்காக்கோ நகருக்கு யு.ஏ-1196 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டது. போயிங் 737-900 விமான நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் ஊழியர்கள் உட்பட 179 பேர் பயணித்தனர்
லூசியான் நகரம் அருகே சென்றபோது அந்த விமானம் திடீரென நடுவானில் குலுங்கியது. அப்போது பயணிகள் தங்களது இருக்கைகளிலிருந்து நகர்ந்து முன் இருக்கைகள் மீது மோதினர். இதனால் பயந்து நடுங்கிய பயணிகள் கத்திக் கூச்சலிட்டனர்.
இதனையடுத்து விமானி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது டென்னசி விமான நிலையத்தில் தரையிறங்கும்படி அறிவுறுத்தப்பட்டது.அதன்படி அந்த விமானம் அவசரமாக டென்னசி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு தயாராக இருந்த மீட்புக் குழுவினர் படுகாயமடைந்த 7 பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்த்தனர்.
மேலும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் வேறொரு விமானம் மூலம் அவர்கள் சிக்காக் கோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. எனினும், விமானியின் சாதுர்யத் தால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
இதுகுறித்து விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.