இலங்கை ஜனாதிபதி எதிர்வரும் 15 முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம்.-- அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு

1 month ago



இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே இதை குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதி நிதியமைச்சர் ஆகியோரும் பங்குபற்றவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

அண்மைய பதிவுகள்