யாழ்.கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் ந.வீரமணி ஐயரை நினைவுறுத்தி நினைவரங்க நிகழ்வு.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் விரிவுரை யாளர் இயல் இசை வாரிதி பிரம்மசிறீ ம.த. ந. வீரமணி ஐயரை நினைவுறுத்தி நடைபெற்ற நினைவரங்க நிகழ்வு புதன்கிழமை காலை ஆரம்பக்கல்வி ஆசிரிய மாணவி கமலக்கண்ணன் மைதிலி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் கலாசாலையில் அமைந்துள்ள வீரமணி ஐயரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் அதிதி பேச்சாளராக வடக்கு மாகாண கல்வித் திணைக்கள அழகியல் பாட முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மதிவாணி விக்னராஜா கலந்து கொண்டு "யாழ்ப்பாணம் வீரமணி ஐயர் - ஒரு பன்முகப் பார்வை" என்ற பொருளில் உரையாற்றினார்.
ஆசிரிய மாணவர்கள் சார்பில் விசேட கல்வி நெறியைச் சேர்ந்த ஆசிரிய மாணவி திருமதி அஸ்மிலா பேகம் "கலாசாலைக்கு பெருமை சேர்க்கும் வீரமணி ஐயர்" என்ற பொருளில் உரையாற்றினார்.
கலாசாலை விரிவுரையாளர் கவிஞர் வேல் நந்தகுமார் அதிதி பேச்சாளர் பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தினார்.
ஆரம்பக் கல்விநெறி ஆசிரிய மாணவன் இ.இராசநாதன் வீரமணி ஐயர் இயற்றிய கீர்த்தனை ஒன்றினைப் பாடினார்.
கலாசாலை அதிபர் சந்திர மௌலீசன் லலீசன் நிறைவுரை ஆற்றினார்.
அதிதி பேச்சாளராகக் கலந்து தகொண்ட திருமதி மதிவாணி விக்னராஜா கலாசாலை முகாமைத்துவக் குழுவினரால் கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் கலாசாலையில் அமைந்துள்ள வீரமணி ஐயரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் அதிதி பேச்சாளராக வடக்கு மாகாண கல்வித் திணைக்கள அழகியல் பாட முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மதிவாணி விக்னராஜா கலந்து கொண்டு "யாழ்ப்பாணம் வீரமணி ஐயர் - ஒரு பன்முகப் பார்வை" என்ற பொருளில் உரையாற்றினார்.
ஆசிரிய மாணவர்கள் சார்பில் விசேட கல்வி நெறியைச் சேர்ந்த ஆசிரிய மாணவி திருமதி அஸ்மிலா பேகம் "கலாசாலைக்கு பெருமை சேர்க்கும் வீரமணி ஐயர்" என்ற பொருளில் உரையாற்றினார்.
கலாசாலை விரிவுரையாளர் கவிஞர் வேல் நந்தகுமார் அதிதி பேச்சாளர் பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தினார்.
ஆரம்பக் கல்வி நெறி ஆசிரிய மாணவன் இ.இராசநாதன் வீரமணி ஐயர் இயற்றிய கீர்த்தனை ஒன்றினைப் பாடினார்.
கலாசாலை அதிபர் சந்திர மௌலீசன் லலீசன் நிறைவுரை ஆற்றினார்.
அதிதி பேச்சாளராகக் கலந்து கொண்ட திருமதி மதிவாணி விக்னராஜா கலாசாலை முகாமைத்துவக் குழுவினரால் கௌரவிக்கப்பட்டார்.