அமெரிக்காவின் கலிபோர்ணியா வைச் சேர்ந்தவர் ஜோசப் பிராண்டன் கெர்ட்வில் (41). இவர் தனது பெற் றோர் ரொனால்ட் கெர்ட்வில் (77) மற்றும் அன்டோனெட் கெர்ட்வில் (79) ஆகியோரைக் கொடூரமாக கொலை செய்து தலையைத் துண்டித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பெற்றோர் வளர்த்து வந்த நாயையும் அவர் கொலை செய்துள்ளார். வீட்டில் பரா மரிப்பு ஊழியராகப் பணிபுரிந்து வந்த வரையும் தாக்கியுள்ளார்.
அத்துடன், கொலை செய்யப்பட்டமை தொடர்பான கிராபிக்ஸ் புகைப்படத்தையும் உறவினருக்கு அனுப்பியுள்ளார். அவர் இது தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்க, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அதற்குள் வீட்டில் இருந்து ஜோசப் பிராண்டன் கெர்ட்வில் தப்பி ஓட முயன்றார். அப்போது பொலிஸார் அவரை வீதியில் வைத்துச் சுற்றி வளைத்தனர். அப்போது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு பொலிஸார் கேட்டனர்.
இதன்போது ஜோசப் பிராண்டன் கெர்ட்வில், "நான் உங்களை விரும்புகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாகப் போகிறீர்கள்" என்றார்.
மேலும், “என்னைச் சுட்டு வீழ்த்தி விடுங்கள்” எனவும் கெஞ்சினார். தொடர்ந்து சரணடைய மறுப்புத் தெரிவித்தமையால் பொலிஸார் அவரைச் சுட்டு காயமடைந்த நிலையில் சுருண்டு விழுந்த அவரை பொலிஸார் கைவிலங்கு போட்டு கைது செய்தனர்.
காயத்திற்கு சிகிச்சை அளித்தபோது பதற்றமின்றிப் பாட்டு பாடினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.