வவுனியா - சிதம்பரபுரத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 22 வயது இளைஞன் ஒருவர் கைது

3 months ago



வவுனியா - சிதம்பரபுரம் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 22 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.