யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான குடிதண்ணீர் விநியோகத்திட்டத்தின் முதலாம் கட்டமாக, இந்தமாத நடுப்பகுதியில் பளை பிரதேசத்துக்கு குடிதண்ணீர் விநியோகிக்கப்படவுள்ளது என்று யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொறுப்பு வாய்ந்த செயற்றிட்ட அதிகாரி தெரிவித்தார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இதை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி செயலகம் தகவல் ஒன்றை வழங்கியுள்ளது. குறிக்கப்பட்ட காலப்பகுதியில் பளை நோக்கி தண்ணீர் விநியோகிக்கப்படவுள்ளது.
நீர் விநியோகத்துக்காக, தாழையடியிலிருந்து நீர் சுத்திகரிக்கப்பட்டு கொண்டுவரப்படவுள்ளது. அதே வேளை, சுமார் 266 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிகிளிநொச்சி, யாழ்ப்பாணம் குடிதண்ணீர் விநியோகத் திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
