திருகோணமலையில் யுவதி ஒருவரை காணவில்லை

6 months ago

திருகோணமலை, சேருவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கநகர் பகுதியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று பொலிஸ் நிலை யத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நடேஸ்குமார் வினோதினி (வயது -25) என்னும் இளம் பெண் ஒருவரே காணாமல் போயுள்ளார் என்று அவரது குடும்பத்தினர் சேருவில மற்றும் மூதூர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துவரும் மூதூர் பொலிஸார் சந்தேகத்தின்பேரில் கிளிவெட்டியைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர் வழங்கிய தகவலின் அடிப் படையில் கிளிவெட்டி கிராமத்தின் எல்லைப் புறத்தில் உள்ள பாழடைந்த கிணற்றைத் தோண்டுவதற்கு நீதிமன்ற அனு மதியை பொலிஸார் பெற்றுள்ளனர். இந்த நிலையில் குறித்த கிணற்ற டியில் நேற்று புதன்கிழமை (3) முதல் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தக் கிணறானது நாளை (5) வெள்ளிக்கிழமை காலை மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் தோண்டப்பட வுள்ளது என்று மூதூர் பொலிஸார் கூறினர்.

சேருவில பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி (வயது 25) என்ற குறித்த யுவதியும், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அயல் கிராமமான கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒரு வரும் காதலித்து வந்ததாகவும் தெரிய வருகின்றது. இந்த நிலையில் கடந்த மே மாதம்

குறித்த யுவதி காதலனுடன் மட்டக்க ளப்புக்குச்சென்று வசித்து வந்ததுள்ளார். மே மாதம் 31 ஆம் திகதி மாலை அழுத நிலையில் குரல் பதிவொன்றை குடும்பத்தாருக்கு அனுப்பியுள்ளார். அன்றைய தினம் இரவு வீடியோ அழைப்பில் குடும்பத்தாருடன் கதைத் துள்ளார்.விரைவில் வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளார்.அதன் பின்னர் அவருடன் தொடர்பு இல்லாமல் போயுள்ளது என குடும்பத்தினர் கூறினர்.

இந்த நிலையில் குறித்த காதலனின் இலக்கத்துக்கு யுவதியின் குடும்பத்தார் பல முறை தொடர்பை ஏற்படுத்த முயற் சித்தனர். எனினும் அந்த இளைஞர் ஜூன் மாதம் 13ஆம் திகதி அழைப்பை எடுத்து தான் வேலையில் நிற்பதாகவும், வீட்டுக்குச் சென்று அக்காவுடன் கதைக்க கொடுப்பதாகவும், காணமல் போயுள்ள யுவதியின் தம்பியிடம் கூறியுள்ளார்.

இதன் பின்னர் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் சேருவில மற்றும் மூதூர் பொலிஸ் நிலையங்களில் தாம் கடந்த முதலாம் திகதி முறைப்பாடு செய்தனர் என்று யுவதியின் குடும் பத்தினர் கூறினர்.

காணாமல்போயுள்ள யுவதி, கொலை செய்து போடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் குறித்த கிணறா னது, ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவி யுடன் அருகில் இருந்த குப்பைகளைக் கொண்டு, மூடப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் குறித்த காதலன் தலைமறைவாகியுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணை களை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்