யாழ்.பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
2 months ago

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவித செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அதேபோன்று தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்வதானால், தொழிற் சங்க நடவடிக்கைக்கு முன்னர் அமைச்சுடன் பேச்சு நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
பேச்சு வார்த்தையின் பின்னர் அடுத்த கட்டம் தொடர்பில் சிந்திக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
