அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக பணியாற்றும் முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவை அந்தப் பதவியில் தொடர்ந்து அமர்த்த அரசு தீர்மானம்
6 days ago
அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக பணியாற்றிவரும் முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவை அந்தப் பதவியில் தொடர்ந்து அமர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தையின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் அரசியல் நோக்கங்களுக்கான கடந்த காலத்தில் நியமிக்கப்பட்டிருந்த 16 தூதுவர்களை மீள அழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மகிந்த சமரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியின் முக்கிய அரசியல் செயல்பாட்டாளராக கடந்த இரண்டு தசாப்தங்களாக செயல்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.