இலங்கையில் ஜனாதிபதியாக வந்தவர்கள் சிங்கள மக்களுக்காகவே சிங்கள ஜனாதிபதிகளாகவே செயற்பட்டார்கள். எம்பி.சிறீநேசன் தெரிவிப்பு.
கடந்த காலங்களில் நாட் டில் 8 ஜனாதிபதிகள் தேர்தல்கள் மூலமாக பதவிக்கு வந்தார்கள். இவர்கள் சிங்கள மக்களுக்கான - சிங்கள ஜனாதிபதிகளாகவே நடந்து கொண் டார்கள். தமிழர்களுக்கு மேல திகமாக பிரச்னைகளை உரு வாக்கினார்களேயன்றி இனப் பிரச்னையை தீர்க்கவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரி வித்தார். மேலும், இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு இலங்கையில் 1978இல் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் இந் நாட்டில் 8 ஜனாதிபதிகள் தேர்தல்கள் மூலமாக பதவிக்கு வந்தார்கள். இவர்கள் சிங்கள மக்களுக்கான சிங்கள ஜனாதிபதிகளாகவே நடந்துகொண் டார்கள். தமிழர்களுக்கு மேல திகமாக பிரச்னைகளை உரு வாக்கினார்களேயன்றி, இனப் பிரச்னையைத் தீர்க்கவில்லை.
அந்த வகையில், 46 ஆண்டு காலமாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட 8 ஜனாதிபதிகளும் இடைக்காலத்துக்காக பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்ட இரு ஜனாதிபதிகளும் தமிழர்களை ஏமாற்றியுள்ளனர்.
தற்போது அதிகாரத்திலுள்ள ஜனாதிபதி ரணில் அவர்கள் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம், மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்னைகளைக் கூட தீர்க்கவில்லை. இதற்கான மக்களின் அறவழிப் போராட்டத்தை அவர் மதிக்கவில்லை.
இப்போது கூட அவரால் அந்தப் பிரச்னைகளைத் தீர்க்க முடியும். சட்டவிரோதமாக குடியேறிய அயல் மாவட்ட குடியேறிகளைக்கூட ஜனாதி பதியால் வெளியேற்ற முடிய வில்லை. மேலும், இனப்பிரச் னைக்கான நிரந்தர தீர்வுக்கான திட்டம் ரணில், சஜித், அநுர ஆகியோரிடம் இல்லை.
இப்படியிருக்க, அதனை நன்கறிந்த பின்பும் சில்லறையான சலுகைகள் அல்லது எதிர்காலத் தனிப்பட்ட தேவைகள் அல்லது நட்புக்காக தமிழர்கள் எந்த வகையில் வாக்களிக்க முடியும். இவர்கள் ஜனாதிபதியானால் தரக்கூடியது இருவர் அல்லது மூவருக்கான அமைச்சர், இராஜாங்க அமைச்சர் பதவிகள் மட்டுமேதான். அதன் பின்னர் கூட்டுப் பொறுப்பு என்ற கட்டுக்குள் இருந்து கொண்டு தலையாட்டிக் கொண்டு, சிறீலங்கா அரசுக்காகவும், அந்த அரசாங்கத்துக்காகவும் செயல்படவே முடியும்.
வடக்கு, கிழக்கு தமிழர்களின் இனப் பிரச்னைக்கான தீர்வு பற்றிச் சிந்திக்கவும் முடியாது - செயல்படவும் முடியாது என்றார்.