வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடி வேல்விழாவை ஒட்டிய பாத யாத்திரை வரலாறு காணாத வகையில் இந்த முறை களைகட்டியுள்ளது.
இதுவரை 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதயாத்திரீகர்கள் கானகத்தினுள் பிரவேசித்து இருக்கின்றார்கள்.
கடந்த 30 ஆம் திகதி முதல் நாள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் காட்டுப் பாதை திறந்து வைக்கப்பட்டது. அன்றைய தினம் சுமார் 7000 அடியார்கள் காட்டினுள் பிரவேசித்தனர். கடந்த ஆறு நாள்களாகப் பயணித்து நேற்றும் முன்தினமும் கதிர்காமத்தை சுமார் 5000 அடியார்கள் வந்தடைந்தனர்.
உகந்தமலை முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவை ஒட்டிய கொடியேற்றம் இன்று ஆலய பிரதம குரு க.கு. சீதாராம் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுமார் 6000 அடியார்கள் காட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.
அதேவேளை இன்று கதிர்காம கந்த ஆலய கொடியேற்றம் பால்குடி பாபா பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதேவேளை வடக்கு - கிழக்கி லிருந்து சுமார் 10000 அடியார்கள் கொடியேற்றத்தில் கலந்து கொண்டார்கள். எதிர்வரும் 11 ஆம் திகதிவரை காட்டுப் பாதை திறந்திருக்கும்.
செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் கடந்த 60 நாள்களின் பின் னர் நேற்று முன்தினம் கதிர்காமத்தை அடைந்து அவர்களது நேர்த்தியை பூர்த்தி செய்தனர்.
இன்னும் மட்டக்களப்பு திருகோ ணமலை அம்பாறை போன்ற பகுதி களை சேர்ந்த பல்லாயிரக் கணக்கான யாதத்திரீகர்கள் தற்சமயம் காட்டில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
இம்முறை பயணம் அனைவருக்கும் சாதகமாக அமைந்திருந்தது. கால நிலை சிறப்பாக இருந்தது.
இரண்டு இடங்களில் பொலிஸ் மற்றும் ராணுவத்தினரின் கணக்கெடுப்பு இடம்பெற்றது.