வவுனியாவில் காணி தொடர்பான பிணக்கு வாள்வெட்டில் முடிந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
வவுனியாவில் காணி தொடர்பான பிணக்கு வாள்வெட்டில் முடிந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
வவுனியா - ஓமந்தை - கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வாள்வெட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கும் வாள்வெட்டு நடத்தியதாகக் கூறப்படும் தரப்பைச் சேர்ந்த குடும்பத்துக்கும் இடையே காணி ஒன்று தொடர்பில் பல நாட்களாக பிணக்கு நிலவியது.
இந்த நிலையில், பிணக்குக்குரிய காணியில் தாய் மாமனும் மருமகனும் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அந்தச் சமயம் அங்கு வந்த சிலர் அவர்கள் மீது மிளகாய் தூளை வீசிவிட்டு வாளால் வெட்டியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் இரு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ (வயது 38) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அத்துடன், மூன்று பிள்ளைகளின தந்தையான ரூ. திலீபன் (வயது 42) என்பவர் ஊரவர்களால் மீட்கப்பட்டு வவுனியா ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.