இந்திய மீனவர்கள் 11 பேரையும் எதிர்வரும் செப்ரெம்பர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
4 months ago
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, இந்திய மீனவர்கள் 11 பேரையும் எதிர்வரும் செப்ரெம்பர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 11 மீனவர்களும் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் பயணித்த இழுவைப் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.