முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய மியன்மார் படகு திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை சென்றடைந்தது.

2 weeks ago


முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய மியன்மார் படகு திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை சென்றடைந்தது.

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 ரோஹிங்கியா அகதிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு நேற்றுக் காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை சென்றடைந்தது.

இந்த நிலையில், குறித்த படகில் வந்தவர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் நாமகள் வித்தியாலயத்தில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவர்களுக்கான உணவு உட்பட ஏனைய வசதிகளை திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச செயலகம் முன்னெடுத்து வருவதோடு ஏனைய அரச திணைக்களங்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 35 சிறுவர்கள் உட்பட 103 அகதிகளுடன் படகொன்று நேற்று முன்தினம் கரையொதுங்கியிருந்தது.

இந்த படகே நேற்றுக்காலை திருகோணமலைக்கு கடற்படையினரால் கொண்டு செல்லப்பட்டது. 

அண்மைய பதிவுகள்