
முல்லைத்தீவில் மிதிவெடியை அகற்றும்போது அது வெடித்ததில் மனிதாபிமான மிதிவெடி அகற்றும் பணியாளர்கள் நால்வர் படுகாயமடைந்தனர்.
முல்லைத்தீவு -மாங்குளம் - துணுக்காய் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மதியம் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதில், அந்தப் பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண் பணியாளர்களே படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் மாங்குளம் ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது மருத் துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
