தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலில் அருந்தவபாலனுக்கு இடம் வழங்குவதில்லை-- வேட்பாளர் தெரிவுக்குழு முடிவு

6 months ago


தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலில்       க.அருந்தவபாலனுக்கு இடம் வழங்குவதில்லை என்று அக்கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழு முடிவு செய்துள்ளதாக அறியவருகின்றது.

இதையடுத்து அந்தக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் சிலர் கட்சியை விட்டு விலகியுள்ளனர் என்று கட்சியின் உள்வீட்டுத்    தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செம்ரெம்பர் 30ஆம் திகதி கூடிய கட்சியின் மத்திய குழுவில் கட்சியின் தலைவர்                சி.வி.விக் னேஸ்வரன்            அருந்தவபாலனை முதன்மை வேட்பாளராக நிறுத்துவதற்கு ஆலோசனை தெரிவித்திருந்தார்.

மத்திய குழுவும் இதற்கு      இணங்கியிருந்தது. ஆனால், கட்சியிலுள்ள மணிவண்ணன் தரப்பினர் இதனை      விரும்பியிருக்க வில்லை.

அவர்கள் கட்சியின் தலைமையை சந்தித்து உரையாடியமையைத் தொடர்ந்து நிலைமையில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.

இதேநேரம், கட்சியில் மீண்டும் இணைவதற்கு அருந்தவபாலன் சில நிபந்தனைகளை              முன்வைத்திருந்தார் என்றும்    கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கட்சித் தலைவர் விக்னேஸ்வரன் வேட்பாளர் பட்டியலில் அருந்தவபாலனுக்கு இடமளிப்பதில்லை என்று               முடிவெடுத்து அதனை கட்சியினருக்கு.    தெரியப்படுத்தியுள்ளார்.

இதற்கு அவர் கட்சியில் இருந்தபோது தலைவரான தம்மை விமர்சித்தமையே காரணம் என்று கூறியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

அவரின் இந்த முடிவுக்கு கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து எழுந்த கருத்து முரண்பாடுகளால் கட்சியிலிருந்து மத்திய குழு உறுப்பினர்கள் சிலர் பதவி விலகியுள்ளனர் என்று அறிவருகிறது.

இதனிடையே மணிவண்ணன் தரப்பை சேர்ந்தவர்களுக்கு வேட்பாளர் பட்டியலில் அதிக இடம் ஒதுக்கப்படுவதாகக் கூறி கட்சியின் ஆரம்பகால மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் கட்சியின் தலைமையுடன் முரண்பட்டுள்ள அதேசமயம் சிலர் கட்சியை விட்டும் விலகியுள்ளனர் என்றும் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.