யாழ்.குருநகர் புனித யாகப்பர் ஆலயம் அரச பயங்கரவாதத்தினால் குண்டு வீசப்பட்டு சிதைக்கப்பட்ட 31வது ஆண்டு நினைவு தினம்

5 months ago



யாழ்.குருநகர் புனித யாகப்பர் ஆலயம் 1993ம் ஆண்டு அரச பயங்கரவாதத்தினால் குண்டு வீசப்பட்டு சிதைக்கப்பட்டதன் 31வது ஆண்டு நினைவு தினம் இன்று புதன்கிழமை (13) நினைவு கூறப்பட்டது.

பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளார் தலைமையில் ஆலயத்தில் காலைத் திருப்பலியின் நிறைவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.

நினைவுத் திருப்பலியினை மண்ணின் மைந்தன் அருட்பணி கை. கனிசியஸ் ராஜ் அடிகளார் ஒப்புக்கொடுத்தார்.

1993ஆம் ஆண்டு இதே தினம் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது கிபிர் விமானங்கள் கண்மூடித்தனமாக மேற்கொண்ட தாக்குதலில் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.