யாழ். வடமராட்சி கிழக்கில் தாக்குதல் சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்

2 months ago



யாழ். வடமராட்சி கிழக்கில் தாக்குதல் சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் கடந்த 19 ஆம் திகதி மாலை நால்வர் மீது வவுனியாவில் இருந்து வந்தவர்களால் மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது.

குடும்பத் தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும், சகோதரனின் மனைவி மீதும் வவுனியா பகுதியில் இருந்து வாகனம் ஒன்றில் ஆட்களை அழைத்து வந்து வீட்டுக்குள் புகுந்து கம்பி, கற்களால் தாக்குதல் நடத்தியிருந்தார்.

அடிகாயங்களுக்குள்ளான நால்வரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

பலத்த காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வத்திராயன் பகுதியைச் சேர்ந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அண்மைய பதிவுகள்