இலங்கையில் சகல மாவட்டங்களிலும் கற்பகத்தின் கிளைகள் திறக்கப்படும் என பிரதியமைச்சர் சு.பிரதீப் யாழில் உறுதியளித்தார்

நாட்டினுடைய சகல மாவட்டங்களிலும் கற்பகத்தின் கிளைகள் திறக்கப்படும் என பெருந்தோட்ட பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் யாழில் உறுதியளித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் தொழிற்துறை திணைக்களம் மற்றும் பனை அபிவிருத்திச்சபை ஆகியன இணைந்து திறந்து வைத்த “கற்பகம்" பனை சார் உள்ளூர் உற்பத்தி நிலைய திறப்பு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதே தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பாக இருந்தது.
விசேடமாகப் பனை சார்ந்த உற்பத்திகளை விற்பனை செய்வதன் ஊடாக வடமாகாண மக்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும்.
பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக தெரிவாகியுள்ள சகாதேவன் முழு மூச்சுடன் செயலாற்றி வருகிறார்.
பனை சார்ந்த உற்பத்திகளை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.
அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் ஊடாக இதுவரை செயற்படுத்தப்படாத அபிவிருத்திகளை இயன்றவரை வடக்கு மாகாணத்தில் செயற்படுத்துவோம்.
பனை சார்ந்த உள்ளூர் உற்பத்திகளின் விற்பனை நிலையமான கற்பகத்தை சகல மாவட்டங்களிலும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனூடாக வெளி மாவட்ட மக்களுக்கும் பனை சார்ந்த உற்பத்திப் பொருள்களை அறிமுகம் செய்ய முடியும்.-என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
