மாங்குளத்தில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்துள்ளார்.

5 months ago




விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்துள்ளார்.

மாங்குளத்தைச் சேர்ந்த மரியதாஸ் யுவான்கீர்த்தி (வயது-36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி இவர் விபத்தில் சிக்கியிருந்தார்.

மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி வந்தபோது எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து நடந்திருந்தது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்திருந்த நிலையில், இவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

மாங்குளம் மருத்துவமனையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், இவர் நேற்று உயிரிழந்தார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.