
கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண் ஒருவரை 10 நாள்களாக காணவில்லை.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் கௌர் என்னும் இளம்பெண், கல்வி கற்பதற்காக கனடாவுக்கு சென்றுள்ளார்.
நிலத்தை விற்று சந்தீப் கௌரை கனடாவுக்குக் கல்வி கற்பதற்காக அனுப்பி வைத்தார்கள் அவளது பெற்றோர்.
சந்தீப் கெளரும் நல்லபடியாக தனது படிப்பை முடித்துவிட்டார். ஒரு நல்ல வேலையில் சேர்ந்து பெற்றோரின் கடனை அடைத்து, குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வருவதாக உறுதியும் அளித்திருந்தார் அவர்.
தனது தோழியுடன் கடற்கரைக்குச் சென்ற சந்தீப் கௌர், புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும்போது கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டி ருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், அதிகாரிகளின் இந்த விளக்கத்தால் திருப்தி அடையாத சந்தீப் கௌரின் பெற்றோர், தங்கள் மகள் காணாமல் போனது தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளார்கள்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
