அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41 பேரின் நீர் கட்டணம் 9 மில்லியன் செலுத்தவில்லை
6 months ago

அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41 பேரின் நீர் கட்டணம் 9 மில்லியன் செலுத்தவில்லை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் நீர் கட்டணம் செலுத்தாமை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இதற்கமைய தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் இன்னும் செலுத்தவில்லை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை பொதுவிதிகளுக்கு அமைய குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக எவ்வித விசேட சலுகைகளும் இன்றி சுற்றறிக்கைகளுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும் இவ்வாறு அறவிடப்படாத நீர் கட்டணங்கள், 9 மில்லியன் ரூபா நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
