யாழ்ப்பாண மாவட்டத்தில் யு. என். டி. பி. நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்.

8 months ago


யாழ்ப்பாண மாவட்டத்தில் யு. என். டி. பி. நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் 20.08.2024 பிற்பகல் 02.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

யு. என். டி. பி. நிறுவனத்தினால் சங்கானை, தெல்லிப்பளை, கோப்பாய், கரவெட்டி மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வாழ்வாதாரம், வீடமைப்புத் திட்டம் உள்ளடங்கலான திட்டங்களின் முன்னேற்றங்கள் ஆராயப்பட்டது. 

இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம பொறியியலாளர், கடற்றொழி்ல் உதவிப் பணிப்பாளர், பிரதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், அரச சார்பற்ற நிறுவன இணைப்பாளர், யு. என். டி. பி. திட்ட இணைப்பாளர் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.