தமிழர் தாயக நிலப்பரப்பில் நாளை கரிநாள் போராட்டங்கள் நடைபெறவுள்ளன. எம்.பி பொ கஜேந்திரகுமார் தெரிவிப்பு

சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக அனுஷ்டித்து வருகின்றனர் நம் மக்கள்.
அதன் அடிப்படையில் தமிழர் தாயக நிலப்பரப்பில் நாளை கரிநாள் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை தாம் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தெடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழ்த் தேச மக்கள் சுதந்திர தினமாக கருதுவது கிடையாது.
சிறிலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் கொண்டு வரப்பட்ட புதிய அரசமைப்புகளைத் தமிழ் மக்கள் நிராகரித்தே வந்திருக்கின்றனர்.
அந்த அரசமைப்புக்கள் மூன்றும் ஒற்றையாட்சி அரசமைப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டமையால் தமிழ் மக்கள் அவற்றௌ நிராகரித்திருந்தனர்.
அதேபோன்று இப்போதும் புதிய அரசமைப்பு கொண்டு வரும் நடவடிக்கைகள் தான் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான ஒற்றையாட்சி அரசமைப்பை தமிழ் மக்கள் எப்போதும் நிராகரிப்பார்கள்.
அடிமை சாசனத்தின் அடையாளமாக இருக்கின்ற ஒற்றையாட்சி அடையாளங்களை நிராகரிக்கிற அதேவேளையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதால் எந்த வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
இவ்வாறான நிலைமையில் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கரிநாளாகத் தான் பார்ப்பது எம்முடைய மரபாக இருக்கிறது.
அந்த வகையில் சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக அனுஷ்டித்து வருகின்றனர் நம் மக்கள்.
அதன் அடிப்படையில் தமிழர் தாயக நிலப்பரப்பில் நாளை கரிநாள் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.
அவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கில் நடக்கவுள்ள இந்த கரிநாள் போராட்டத்தில் நாங்களும் கலந்து கொள்ளவுள்ளோம்.
இதேவேளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் வடக்கில் கிளிநொச்சியிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் நாளையதின் கரிநாள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.
கட்சி பேதங்களுக்கப்பால் அனைவரையும் அவற்றில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
