ஒரு முறையாவது குழந்தைகளோடு தமிழகம் வந்து, தமிழகத்துக்கு முடிந்ததை செய்யுங்கள்" என்று சிகாகோ வாழ் தமிழர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

உங்களுக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழுங்கள். ஆண்டுக்கு ஒருமுறையாவது குழந்தைகளோடு தமிழகம் வந்து, தமிழகத்துக்கு முடிந்ததை செய்யுங்கள்" என்று சிகாகோ வாழ் தமிழர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள ஸ்டாலின், சிகாகோ தமிழ் கூட்ட மைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற, அமெரிக்க வாழ் தமிழர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதன்போது இனம், மொழி, நாடு, சாதி, மதம், பால், வர்க்கம், நிறம் என்று எந்தப் பாகுபாட்டுக்கும் இடமளிக்காமல், உலக உயிர்கள் அனைத்துக்கு மான பொதுமறையை உருவாக்கிய வள்ளுவரை தந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் நாம். ஊரை தாண்டிய ஊரும் உலகமும் எப்படி இருக்கும் என்று அறியாக் காலத்திலேயே, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று எல்லோரையும் சொந்தமாக கருதி இலக்கியம் படைத்த புகழுக்கு சொந்தக்காரர்கள் நாம் என்றும் முதல்வர் கூறினார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
