ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 34 வேட்பாளர்கள் பிரசார செலவு அறிக்கையை வழங்கவில்லை.-- தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
6 months ago

நடைபெற்று முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 34 வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரசார செலவு அறிக்கையை இன்னமும் வழங்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய 38 வேட்பாளர்களில், 4 வேட்பாளர்கள் மட்டுமே தங்களது பிரசார செலவு அறிக்கையை வழங்கியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
தேர்தல் செலவு கட்டுப்பாடு சட்டத்தின்படி, எதிர்வரும் 13ஆம் திகதிக்குள் பிரசார செலவு அறிக்கைகளை தேர்தலில் போட்டியிட்டவர்கள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதிக்குள் தமது பிரசார செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
